கைதிகளுடன் பயணித்த சேலம் போலீஸ் பஸ் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதம்
கோபி: இரு கைதிகளுடன் பயணித்த சேலம் மாவட்ட போலீசாருக்கும், அரசு பஸ் கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்-டதால், கோபியில் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம், கோபி சிறையில் வழக்கு ஒன்றில் அடைக்கப்-பட்டிருந்த, இரு கைதிகளை விசாரணைக்கு அழைத்து செல்ல, சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த இரு எஸ்.எஸ்.ஐ., மற்றும் ஒரு போலீஸ்காரர் என மூவர் கோபிக்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் மூவரும் கோபி சிறையில் இருந்து, இரு கைதிகளுடன் கச்சேரிமேடு பஸ் ஸ்டாப்புக்கு நேற்று காலை 10:00 மணிக்கு சென்றனர். அப்போது சத்தியில் இருந்து, கோபி வழியாக ஈரோடு வரை செல்லும், 'பாயின்ட் டூ பாயின்ட்' அரசு பஸ்சில் ஐந்து பேரும் ஏறினர்.பின் சேலம் போலீசார், பணியில் இருந்த கண்டக்டரிடம் வாரன்ட்டை காண்பித்துள்ளனர். அதற்கு பஸ் கண்டக்டர், 'பாயின்ட் டூ பாயின்ட்' பஸ் என்பதால், சத்தியமங்கலத்தில் இருந்து பயணித்ததாகதான் டிக்கெட் கணக்கில் எடுத்து கொள்ள முடியும் என, தெரிவித்துள்ளார். அதற்கு போலீசார், 'கோபியில் இருந்து கைதிகளை அழைத்து வருவதால், அதற்கு மட்டுமே டிக்கெட் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்-பட்டது. அதற்குள் பஸ் கோபி பஸ் ஸ்டாண்ட் வந்தது.பின் வாக்குவாதம் முற்றியதால், கோபி போலீசார் சம்பவ இடத்-துக்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, மாற்று அரசு பஸ்சில், இரு கைதிகளுடன் சேலம் போலீசாரை அனுப்பி வைத்தனர்.