உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் நகர்புற மைய அளவில் விளையாட்டு போட்டி தொடக்கம்

சேலம் நகர்புற மைய அளவில் விளையாட்டு போட்டி தொடக்கம்

சேலம், பள்ளி மாணவர்கள் இடையே விளையாட்டு திறனை வளர்க்க, ஆண்டுதோறும் பாரதியார், குடியரசு தின விளையாட்டு போட்டிகளை, பள்ளி கல்வித்துறை நடத்துகிறது. சேலம் நகர்புற மையம் சார்பில், குடியரசு தின தடகள போட்டி, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று தொடங்கியது. 65 பள்ளிகளை சேர்ந்த, 120 மாணவர்கள், 80 மாணவியர் பங்கேற்றனர். ஈட்டி எறிதல், தடை ஓட்டம், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், போல்வால்ட், டிரிபிள் ஜம்ப், 3,000 மீ., ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. திங்கள், செவ்வாயில் மற்ற போட்டிகள் நடக்க உள்ளன. வெற்றி பெறுவோர், வருவாய் மாவட்ட போட்டிகளில் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !