துாய்மை பணியாளர்கள் ஸ்டிரைக் இ.கம்யூ., - எம்.எல்.ஏ., பங்கேற்பு
சேலம்:சேலம் டிஸ்டிரிக் கார்ப்பரேஷன், முனிசிபல் ஒர்க்கர்ஸ் யுனியன் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தினேஷ் தலைமை வகித்தார்.இ.கம்யூ., திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., மாரிமுத்து பேசியதாவது: சேலம் மாநகராட்சி சார்பில் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள், நியாயமான சம்பளத்தை கூட வழங்குவதில்லை. பணி பாதுகாப்பும் இல்லை. தனியாரிடம் துாய்மை பணியை ஒப்படைக்காமல், மாநகராட்சி நிர்வாகமே ஏற்க வேண்டும். அந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, 2ம் நாளாக துய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலர் சின்னசாமி, இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.