உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வங்கிக்கடன், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை-களை கேட்டு, 326 பேர் மனு அளித்தனர்.அதேபோல், மாற்றுத்திறனாளிகளிடம், 10 மனுக்கள் பெற்றார். தொடர்ந்து, தாட்கோ மூலம் துாய்மை பணியாளர்களின் குழந்-தைகள் 10 மற்றும் பிளஸ் 1 பயில்வோருக்கு தலா, 1,000 ரூபாய், பிளஸ் 2 பயில்வோருக்கு தலா, 1,500 ரூபாய் என, 8 பேருக்கு, 9,000 ரூபாய்க்கான கல்வி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார். டி.ஆர்.ஒ., ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !