பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடக்கம்
மேட்டூர்,:வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து, புதுச்சாம்பள்ளி அரசு மேல்நி-லைப்பள்ளியில் சுற்றுசுவர் கட்ட, கனிம நிறுவன வளர்ச்சி திட்-டத்தில், 1.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அதில் பா.ம.க.,வின், மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். தி.மு.க.,வின், நங்கவள்ளி ஒன்றிய செயலர் அர்த்தநாரீஸ்வரன், வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து செயலர் முருகன், தலைமை ஆசிரியை வசந்தா உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.