உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அனுப்பியது ரூ.3,000; வரவு வைத்தது ரூ.1,000 ஏகாபுரம் ஊராட்சி தொழில் வரி வசூலில் உள்குத்து

அனுப்பியது ரூ.3,000; வரவு வைத்தது ரூ.1,000 ஏகாபுரம் ஊராட்சி தொழில் வரி வசூலில் உள்குத்து

சேலம், சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த ஏகாபுரம் ஊராட்சியை சேர்ந்த முத்துசாமி மகன் கார்த்தி, 26. ஈரோடு தனியார் கல்லுாரியில் பி.எல்., 3ம் ஆண்டு படிக்கும் இவர், விடுமுறை நாட்களில் தந்தையின் விசைத்தறி கூடத்தில் வேலை செய்கிறார். இவர் நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய புகார்மனு விபரம்:எங்களுடைய விசைத்தறி கூடத்துக்கு தொழில்வரி செலுத்த கடந்த ஜூனில், ஏகாபுரம் ஊராட்சி எழுத்தர் சரவணன், கணினி ஆப்பரேட்டர் கோகுலபிரியா ஆகியோரை அணுகினேன். அதற்கு கோகுலபிரியா, 10,000 ரூபாய் செலுத்தினால் தொழில்வரி ரசீது கிடைக்கும் என்றார். அதன்பின், ஜூலை 2ல், மொபைலில் தொடர்பு கொண்டு, 3,000 ரூபாயை எனக்கு கூகுள் பே அனுப்புங்கள். உங்களுக்கு உடனடியாக வாட்ஸ் ஆப் மூலம் ரசீது அனுப்பி வைக்கிறேன் என்றார். அதன்படி, 3,000 ரூபாய் அனுப்பி வைத்தேன். ஆனால், எனக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிய ரசீதில், 1,000 ரூபாய் மட்டும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.இதுபற்றி அவரிடம் கேட்ட போது, பி.டி.ஒ., துணை பி.டி.ஒ., மற்றும் ஊராட்சி செயலரை கவனிக்க வேண்டும் என கூறி, மிரட்டல் தொணியில் பேசினார். இது தொடர்பாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினேன். அதன் எதிரொலியாக உரிய விசாரணை நடத்தி, 7 நாளில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாநந்தினி, கடந்த செப்.,26ல் உத்தரவிட்டார். அதன்படி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருளாளன், என்னிடம் விசாரணை நடத்தவே இல்லை. இதுபற்றி, கலெக்டர் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அதற்கு, விசாரணை தொடர் நடவடிக்கையில் உள்ளது என கடந்த 14ல், பதில் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த விசாரணையும் நடத்தாத காரணத்தால், மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !