உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல் நாளே அதிர்ச்சி கணினி, பிரின்டர் திருட்டு

முதல் நாளே அதிர்ச்சி கணினி, பிரின்டர் திருட்டு

வாழப்பாடி; கோடை விடுமுறை முடிந்து, வாழப்பாடி, சேசன்சாவடி அரசு தொடக்கப்பள்ளி நேற்று திறக்-கப்பட்டது. அப்போது கணினி அறையின் பூட்டு அறுக்கப்பட்டு, அறை திறந்து கிடந்தது. உள்ளே சென்று ஆசிரியர்கள் பார்த்தபோது, கணினி, பிரின்டர் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியை நித்யா புகார்படி, வாழப்பாடி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்-சிகள் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.நித்யா கூறுகையில், ''கடந்த, 3 மாலை, கணினி அறையை பூட்டிச்சென்ற நிலையில், மறுநாள் காலை திருடுபோனது தெரியவந்தது. பள்ளியில் இருந்த, 'சிசிடிவி' கேமரா ஒயர்கள், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டே திருட்டில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை