வீட்டில் பீரோவை திறந்து வெள்ளி, தங்க நகை திருட்டு
சேலம்: சேலம் அஸ்தம்பட்டி, ஆத்துக்காடு, வடப்புரத்தை சேர்ந்தவர் சக்திவேல், 65. இவர் கடந்த, 28 காலை, 11:30 மணியளவில் வீட்டைபூட்டி, சாவியை, அங்கிருந்த ஷூவில் மறைத்து வைத்து-விட்டு, மகனை சந்திக்க, அவர் வேலை செய்யும் கோரிமேட்டில் உள்ள அலுவலகத்துக்கு சென்றார். பகல், 12:30 மணியளவில் வீடு திரும்பியபோது, கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்-சியடைந்தார். பக்கத்தில் வசிக்கும் 10 வயது பேத்தி, வீட்டுக்குள் விளையாடி கொண்டிருந்தார்.உள்ளே சென்று பார்த்த போது, துணிமணிகள் சிதறி கிடந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த அரைபவுன் தோடு, மூக்குத்தி கால் பவுன், 400 கிராம் வெள்ளிபொருட்கள் திருட்டுப்போனது தெரிந்தது. அதன் மதிப்பு 57 ஆயிரம் ரூபாய்.இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசில், சக்திவேல் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து நடந்த விசாரணையில், சாவியை வைத்துவிட்டு சென்றதை நோட்டமிட்ட கும்பல், வீட்டை திறந்து, பூட்டாமல் கிடந்த பீரோவில் வைத்திருந்த நகை-களை சுருட்டி சென்றதும், அதையறியாத அவரது பேத்தி, வீட்-டுக்குள் வந்து விளையாடியது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, கைவரிசை காட்டிய நபர்-களை போலீசார் தேடி வருகின்றனர்.