சிறுதுளை இருதய அறுவை சிகிச்சை பிரிவு கோகுலம் ஸ்பெஷாலிட்டியில் தொடங்கியது
சேலம்: சேலம் மண்டலத்தில் முதல்முறையாக, சிறுதுளை இருதய அறுவை சிகிச்சை பிரிவு, சேலம், ஸ்ரீகோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இருதய அறுவை சிகிச்சை துறை சார்பில் நேற்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா, ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே உள்ள, சி.ஜே.பளாசியோ ஓட்டலில் நடந்தது. மருத்துவமனை மேலாண் இயக்குநர் அர்த்தனாரி தலைமை வகித்தார். ஜி.டி.பி., குழும தலைவர் முத்துராஜன், முன்னிலை வகித்தார். மருத்துவர் நாகூர் மீரான் வரவேற்றார்.திருவேணி குழும தலைவர் பாலசுப்ரமணியம், தமிழக மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகானந்தத்துக்கு நினைவு பரிசு வழங்கினார். மருத்துவர் விஜய் ஆனந்த், சிறு துளை இருதய அறுவை சிகிச்சை குறித்து எடுத்துரைத்தார்.தொடர்ந்து மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி பேசுகையில், ''சிறுதுளை இருதய அறுவை சிகிச்சை என்பது, நெஞ்சு பகுதியில் சிறு துவாரம் வழியே மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பிரத்யேக கருவிகளை பயன்படுத்தி, இருதய வியாதிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் ஒரு நவீன முறை,'' என்றார்.இந்தியன் மெடிக்கல் கவுன்சில் பிரசிடன்ட் பிரகாசம், ஜெய்ராம் கல்லுாரி சேர்மன் ராஜேந்திர பிரசாத், மருத்துவர் செல்லம்மாள், கோகுலம் மருத்துவமனை இயக்குனர்கள், மருத்துவர் ராஜேஸ், மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.