உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் தாளாளரின் மகன் போக்சோவில் கைது

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் தாளாளரின் மகன் போக்சோவில் கைது

பென்னாகரம், ஏரியூர் அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, பள்ளி தாளாளரின் மகனை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அழகாகவுண்டனுாரில், தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி தாளாளராக நடராஜ் உள்ளார். இவரின் மகன் விணுலோகேஸ்வரன், 33; இவருக்கு மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பள்ளி தாளாளரின் மகன் என்பதால், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கு ஆங்கில பாடம் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் பள்ளி மாணவி ஒருவர், இரு நாட்களாக பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தார். பெற்றோர் விசாரித்தபோது, விணுலோகேஸ்வரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், தகாத முறையில் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகார் படி, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். போக்சோ வழக்குப்பதிவு செய்து, விணுலோகேஸ்வரனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை