மேலும் செய்திகள்
அண்ணன் அடித்துக்கொலை தம்பி வெறி
20-Sep-2025
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, சொத்து தகராறில் சித்தப்பாவை கொலை செய்த, அண்ணன் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா, கொங்கணாபுரம் அருகே மட்டம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துவேல், 60. இவருடன் உடன் பிறந்த சகோதர்கள், 4 பேர், சகோதரிகள் 2 பேர் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக, 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சமமாக பங்கிட்டு கொள்வதில், இவர்களிடையே பல ஆண்டுகளாக தகராறு நடந்து வந்துள்ளது.இந்நிலையில் நேற்று இரவு, 9:00 மணிக்கு மட்டம்பட்டியில் உள்ள வீட்டருகில் முத்துவேலு, அவரது அண்ணன் மகன் குப்புசாமி, 39, ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்துவேலின் மார்பில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த முத்துவேல், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அவரது குடும்பத்தினர் முத்துவேலுவை, இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே முத்துவேலுவை கத்தியால் குத்திய குப்புசாமி, குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார்.இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20-Sep-2025