மேலும் செய்திகள்
தென் மாநில ஆணழகன் போட்டிகோப்பை, லச்சினை அறிமுகம்
02-May-2025
சேலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய ஆணழகன் சங்கம், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம், சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் இணைந்து நடத்தும், தெற்கு மண்டல, தென் மாநில ஆணழகன் போட்டி, வரும், 17, 18ல், சேலம் நேரு கலையரங்கில் நடக்க உள்ளது. இதில் தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட செயலரான, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைப்பார். சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் சுரேஷ்குமார், தி.மு.க.,வின் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
02-May-2025