ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கழிவுகள் அகற்ற தனி ஏற்பாடு
சேலம், சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:மாநகர் பகுதியில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீடு, வணிக நிறுவனங்களில் உருவாகும் கூடுதல் கழிவுகளை சாலையோரம், காலி மனைகள், நீர் நிலைகளில் கொட்டாமல், தங்கள் பகுதிக்கு தினசரி வீடு, வீடாக வரும் திடக்கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியே தரம் பிரித்து ஒப்படைக்கப்பட வேண்டும். ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வணிகர்களுக்கென இரவு நேரங்களில் அனைத்து மண்டலங்களிலும் திடக்கழிவுகளை பெறுவதற்கு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, காலிமனை, சாக்கடை உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை கொட்டினால் திடக்கழிவு மேலாண் விதிகளின்படி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.