மேலும் செய்திகள்
நீரஜ் சோப்ராவின் 'கிளாசிக் ஈட்டி எறிதல்' போட்டி
04-Jul-2025
சேலம், அறிவுசார் குறைபாடுடையோருக்கு தேசிய அளவில் சிறப்பு ஒலிம்பிக் போட்டி, சட்டீஸ்கரில் கடந்த வாரம் நடந்தது. அதில் தமிழக அணி சார்பில் பந்து எறிதல்(போசி) விளையாட்டில் வெற்றி பெற்றனர். அந்த அணியில் சேலம் மாவட்டத்தில், 4 பேர், சென்னை, மதுரை, திருப்பூர், திருநெல்வேலி மாவட்டங்களில் தலா ஒருவர் பங்கேற்றனர்.இதில் சேலம் வீரர்கள் வேலுசாமி, சரண் தங்கம், நவீனா வெள்ளி, பசுபதி வெண்கலம் வென்றனர். இதன்மூலம், 2027ல் வட அமெரிக்காவில் நடக்க உள்ள சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று, சேலம் ரயில்வே ஸ்டேஷன் வந்த நிலையில், சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் தமிழக அமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் சுஜாதாதலைமையில் செயலர் ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பெற்றோரும் பங்கேற்றனர்.
04-Jul-2025