மேலும் செய்திகள்
வள்ளலார் அவதார நாள் விழா
5 hour(s) ago
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தின் நந்தவனம் அருகே, அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் சுவாமிகளின் சன்னதி அமைந்துள்ளது. அவரது, 203வது அவதார திருநாளான நேற்று காலை, 6:00 மணிக்கு அவரது திருவுருவ சிலை முன் அருட்ஜோதி ஏற்றி வழிபாடு துவங்கியது.ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மாலையில் வள்ளலார் பாடல்களை பாடினர். குப்புசாமி என்பவர் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். இரவு, 8:00 மணிக்கு சிறப்பு ஜோதி வழிபாடு, அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நடத்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதே போல், சேலம் டவுன் பாவடி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், பாவடி செங்குந்தர் மண்டபத்தில் வள்ளலாரின் அவதார திருவிழா நடத்தப்பட்டது. வள்ளல் அடிமை சங்ககிரி சற்குரு சுவாமிகள் ஜோதியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து அகவல் பாராயணம், பக்தி பாடல்கள், இன்னிசை கச்சேரி நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
5 hour(s) ago