உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறப்பு ரயில் நீட்டிப்பு

சிறப்பு ரயில் நீட்டிப்பு

சேலம்:ஹூப்ளி - ராமநாதபுரம் சிறப்பு வார ரயில் வரும், 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: கர்நாடகாவின் ஹூப்ளி - ராமநாதபுரம் சிறப்பு வார ரயில், சனி காலை, 6:50க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 5:00 மணிக்கு ராமநாதபுரத்தை அடைகிறது. தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியே இயக்கப்படுகிறது. செப்., 27 அறிவிக்கப்பட்டிருந்த இந்த ரயில், தற்போது அக்., 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்க ரயில், ஞாயிறு இரவு, 10:00 மணிக்கு கிளம்பி அடுத்தநாள் இரவு, 7:40க்கு ஹூப்ளியை அடைகிறது. இந்த ரயில், செப்., 28 வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்., 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை