உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோகுலம் செவிலியர் கல்லுாரியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்

கோகுலம் செவிலியர் கல்லுாரியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்

சேலம், சேலம் ஸ்ரீகோகுலம் செவிலியர் கல்லுாரி, துணை மருத்துவ படிப்புகள் சார்ந்த கல்லுாரியில் விளையாட்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லுாரி நிர்வாக அறங்காவலர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா, தேசியக்கொடி ஏற்றி, மாணவ, மாணவியரின் அணிவகுப்பை ஏற்ற பின் பேசியதாவது: விளையாட்டு ஒருவரை மென்மேலும் மெருகேற்றி அனைத்து திறன்களையும் வளர்க்கும். உடல் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அதன்மூலம் கல்வியில் சிறந்த வெற்றியாளராக திகழ முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.மேலும் கைப்பந்து, வலைப்பந்து, எறிபந்து, இறகுப்பந்து, மட்டைப்பந்து, கோ- - கோ, 100, 200, 400, 800 மீ., ஓட்டம், தொடர் ஓட்டம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டெறிதல் ஆகியவற்றில் திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை, ஆசிரியர் குழுவினர் ஒருங்கிணைத்தனர். துணை முதல்வர் காமினி சார்லஸ், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை