ஸ்ரீநிவாஸ கல்யாண மஹோத்ஸவம் தொடக்கம்
சேலம், டிச. 15-தமிழ்நாடு பிராமணர் சங்கம், சேலம், ஜாகீர் அம்மாபாளையம் சுப்ரமணிய நகர் கிளை சார்பில், 7ம் ஆண்டு ஸ்ரீநிவாஸ கல்யாண மஹோத்ஸவ நிகழ்ச்சி, ஸ்வர்ணபுரியில் நேற்று தொடங்கியது. கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, கலச ஸ்தாபனம், குரு கீர்த்தனைகள், திவ்ய பிரபந்த பாராயணம், அஷ்டபதி தரங்கம் உள்ளிட்டவை நடந்தன.பெங்களூரு குருதாஸ பஜன்மண்டலி சிவப்ரியா ராமஸ்சுவாமி குழுவினரின் பஜனை நடந்தது. இரவில் நாமசங்கீர்த்தனம், முதல் பஞ்சபதி பூஜை, தியானம், திவ்யநாமம் உள்ளிட்டவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று திருக்கல்யாண உற்சவ வைபவம், திருமாங்கல்யதாரணம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது என, கிளை தலைவர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.