உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி விளையாட்டு விழா

எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி விளையாட்டு விழா

சேலம், சேலம், கருப்பூர், எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியின், 23ம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. காலையில் பிரைமரி பள்ளி விளையாட்டு விழாவுக்கு, பள்ளி நிர்வாக செயலர் சண்முகம் தலைமை வகித்து, ஒலிம்பிக் விளக்கை ஏற்றினார். தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை, நிர்வாக தலைவர் ஆண்டியப்பன், செயலர் சண்முகம், பொருளாளர் பன்னீர்செல்வம், இயக்குனர்கள் வழங்கினர். பள்ளி முதல்வர் அமுதா குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாக தலைவர் ஆண்டியப்பன் தலைமை வகித்தார்.நிர்வாக செயலர் சண்முகம், பொருளாளர் பன்னீர்செல்வம், இயக்குனர்கள், ஓமலுார் வட்டாரம், சேலம் மாவட்ட அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி பாராட்டினர்.தொடர்ந்து கராத்தே, சிலம்பம், யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமையாசிரியர் குமார், உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள், விழாவை நடத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ