மல்லிக்குட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தாரமங்கலம், தாரமங்கலம் ஒன்றியம், அமரகுந்தி மல்லிக்குட்டை ஊராட்சி மக்களுக்காக, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அமரகுந்தி தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.இதில் வருவாய், ஊரக வளர்ச்சி உட்பட 18 துறை சார்ந்த அலுவலர்கள் மக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு, 399 பேர் உட்பட வருவாய், ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட 14 துறைகளில் 853 பேர் மனு அளித்தனர். தாரமங்கலம் பி.டி.ஓ., க்கள், வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.