மாநில கலைத்திருவிழா ஒத்திவைப்பு
சேலம், டிச. 4-ஈரோடு, நாமக்கல், திருப்பூரில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட மாநில கலைத்திருவிழா, அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கலை உள்ளிட்ட தனித்திறன்களை மேம்படுத்த, ஆண்டுதோறும் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.பள்ளி, வட்டார போட்டிகளில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மூலம், கடந்த வாரம் மாவட்ட கலைத்திருவிழாவில், 84 வகை போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இப்போட்டிகள், டிச., 5, 6ல், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல்லில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புயல், மழையால் இப்போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அரையாண்டு தேர்வு தொடங்க உள்ளதால், இப்போட்டிகள் அனைத்தும் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஜன., 4ல், ஒன்று முதல், 5ம் வகுப்புக்கு கோவையிலும், 6 முதல், 8ம் வகுப்புக்கு திருப்பூரிலும் நடக்க உள்ளது. அதேபோல் ஜன., 3, 4ல், 9, 10ம் வகுப்புகளுக்கு ஈரோட்டிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நாமக்கல்லிலும் மாநில கலைத்திருவிழா போட்டிகள் நடக்க உள்ளன.