உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் கோப்பையில் மாநில செஸ் தொடக்கம்

முதல்வர் கோப்பையில் மாநில செஸ் தொடக்கம்

சேலம், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி கடந்த ஆக., 26ல் தொடங்கி, செப்., 12 வரை, 38 மாவட்டங்களில் நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்ளுக்கு மாநில போட்டிகள் தொடங்கியுள்ளன. அதன்படி சேலம்,பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேரு கலையரங்கில், பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் செஸ் போட்டி நேற்று தொடங்கியது. 38 மாணவர்கள், 38 மாணவியர் என, 76 பேருக்கான போட்டியை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தொடங்கி வைத்தார். இன்றும் போட்டி நடக்கிறது.அதேபோல் கல்லுாரி மாணவர்களுக்கு செஸ் போட்டி, வரும், 6 முதல், 8 வரை நடக்க உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கேரம் போட்டி, இன்று தொடங்கி, வரும், 7 வரையும், கல்லுாரி மாணவர்களுக்கு கேரம் போட்டி, வரும், 8 முதல், 10 வரையும், அரசு ஊழியர்களுக்கு கேரம் போட்டி, வரும், 11 முதல், 13 வரையும் நடக்க உள்ளது. இவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் வீரர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். தொடக்க விழாவில், கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மேயர் ராமச்சந்திரன், சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை