உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.16 லட்சத்தில் பொருட்கள் திருடிய மாணவர் கைது

ரூ.16 லட்சத்தில் பொருட்கள் திருடிய மாணவர் கைது

சேலம்: சேலம், ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே தனியார் தொழில்நுட்ப கல்லுாரி உள்ளது. அதன் வளாகத்தில் இருந்த, ட்ரோன், மொபைல் போன், கேமராக்கள் என, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கடந்த, 22ல் திருடுபோனது. இதுதொடர்பாக கல்லுாரி மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ்குமார் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்து, கல்லுாரி விடுதியில் தங்கி, 4ம் ஆண்டு இ.சி.இ., படிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பஜார் தெருவை சேர்ந்த மாக்வியா சாதிக், 21, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் அறையில் பதுக்கி வைத்திருந்த, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !