ப.பட்டி ஏரி சுற்றுலாத்தலம் நிதி தேவை குறித்து ஆய்வு
பனமரத்துப்பட்டி:சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு, 10 ஆண்டுக்கு முன் சுற்றுலா தலம் அமைக்க, தனியார் நிறுவனம் திட்ட அறிக்கை தயாரித்து, மாநகராட்சியிடம் வழங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அலுவலர்கள், ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, 50 ஏக்கரில் அடர் வனம் அமைக்கும் பகுதி, வால்டோர், குடிநீர் சுத்திகரிப்பு தொட்டி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். சுற்றுலாத்தலம், ஏரி மேம்பாட்டு பணிகளுக்கான சத்தியக்கூறுகள், நிதி தேவை குறித்து ஆராய்ந்தனர். மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி(திட்டம்) உடனிருந்தார்.