ஓட்டுனர் பயிற்சி பள்ளி அமைக்க ஆய்வு
சங்ககிரி, சங்ககிரி தாலுகாவில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி அமைக்க, 'டாடா' நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியது. இதையடுத்து தேவண்ணகவுண்டனுார் ஊராட்சியில் 13.5 ஏக்கர் நிலம் உள்ள இடத்தையும், அரசிராமணி குள்ளம்பட்டி, மலைமாரியம்மன் கோவில், பீரங்கி திட்டு பகுதியில், 19 ஏக்கர் உள்ள இடத்தை, தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் கஜலட்சுமி நேற்று ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஆர்.டி.ஓ., லோகநாயகி, வட்டார போக்குவரத்து அலுவலர் வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.