மேலும் செய்திகள்
மானிய விலையில் பவர் டில்லர், களை எடுக்கும் கருவி
07-Dec-2024
சேலம்: சேலம் மாவட்டத்தில், விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்கு-றையை நிவர்த்தி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்யவும், 2024 - 25ல், மானிய விலையில் பவர் டில்லர், பவர் வீடர் தலா, 4,000 எண்ணிக்கையில், வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுகின்றன. தனிப்பட்ட விவசாயிக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சம், 1.20 லட்சம் ரூபாய், பவர் வீடருக்கு, 63,000 ரூபாய் அல்லது கருவியின் மொத்த விலையில், 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அத்-தொகை சிறு, குறு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண் விவசா-யிகளுக்கு வழங்கப்படுகின்றன.இதர விவசாயிகளுக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில், 40 சதவீதம். இதில் எது குறைவோ, அத்தொகை மானியமாக கிடைக்கும்.இத்திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு விவசாயி-களின் பங்களிப்பு தொகையை குறைக்க உதவிடும்படி, நடை-முறை மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியத்தை தமிழக அரசு வழங்குகிறது. இதுதொடர்பான விபரம் பெற, வேளாண் பொறியியல் துறையின், சேலம் மாவட்ட செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் அலுவலகத்தையும், கோட்ட அளவில் சேலம், மேட்டூர், ஆத்துார், சங்ககிரியில் உதவி செயற்பொறியா-ளர்கள் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
07-Dec-2024