தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு ஜலகண்டாபுரம் பள்ளி சிறப்பிடம்
ஜலகண்டாபுரம்: ஜலகண்டபுரம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் தொடர் சாதனை படைத்-துள்ளனர்.பிளஸ் 1 மாணவர்களுக்கான, தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு-2024, கடந்த அக்., 19ல் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும், 2,35,025 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். 157 மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர். மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இதில், ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, 41 மாணவியர் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.சாதனை படைத்த மாணவியருக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு சார்பில் பாராட்டு விழா, தலைமை ஆசிரியர் கலா தலைமையில் நடந்தது. உதவி தலைமை ஆசி-ரியர் ராமகிருஷ்ணன், பயிற்சி அளித்த பட்டதாரி தமிழாசியர் நல்-லாசிரியர் லெனின், முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியை இந்தி-ராகாந்தி, பட்டதாரி தமிழாசிரியை ஜானகி ஆகியோரை, சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள் பாராட்டினார்.