உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொருளாதார ரீதியாக தமிழகம் 9.63 சதவீதம் உயர்ந்துள்ளது

பொருளாதார ரீதியாக தமிழகம் 9.63 சதவீதம் உயர்ந்துள்ளது

சேலம்: தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்டம் சார்பில், முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்தநாள் போட்டி பரிசளிப்பு விழா, நேற்று தொங்கும் பூங்காவில் நடந்தது. மாநகர் செயலர் ரகுபதி முன்னிலை வகித்தார்.சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''பெண்க-ளுக்கு விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புது-மைப்பெண் திட்டத்தில் கல்லுாரி மாணவியருக்கு வழங்குவ-துபோல், மாணவர்களுக்கும் மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்-கப்படுகின்றன. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களால் பொருளா-தார ரீதியாக தமிழகம், 9.63 சதவீதம் உயர்ந்துள்ளது. அதனால் மக்கள் பாதுகாப்புக்கு அரணாக விளங்கும் முதல்வருக்கு நாமும் உறுதியாக இருக்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்-பட்டன. தேர்தல் பொறுப்பாளர்கள் இளங் கோவன், சுகவனம், மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை