உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொறியியலில் அதிக மாணவர்கள் சேர ஆசிரியர் நடவடிக்கை எடுக்க அறிவுரை

பொறியியலில் அதிக மாணவர்கள் சேர ஆசிரியர் நடவடிக்கை எடுக்க அறிவுரை

சேலம்:'கல்லுாரி கனவு' திட்டத்தில், சேலம் மாவட்டத்தில், பொறியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை வழிகாட்டி ஆசிரியர்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.அதில் கலெக்டர் இளம்பகவத் பேசியதாவது:பொறியியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, கல்லுாரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் கலந்தாய்வில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன், மாணவளின் மதிப்பெண், கட் ஆப், ரேங்க் எண், இடஒதுக்கீடு பிரிவு உள்ளிட்ட அடிப்படை தகவல்களை சேகரித்து கொண்டு, ஒவ்வொரு பகுதியாக சரியான முறையில் பூர்த்தி செய்து, அவர்களுக்கு ஏற்ற கல்லுாரி, பாட பிரிவுகளை தேர்வு செய்ய உதவ வேண்டும். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக மாணவர்கள் பொறியியல் கல்லுாரிகளில் சேரும்படி, ஆசிரியர்கள் செயல்பட்டு, மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.உதவி கலெக்டர் நந்தனா(பயிற்சி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தகுமாரி(பொ), மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை