உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தென்னை பண்ணையில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

தென்னை பண்ணையில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

ஓமலுார், டேனிஷ்பேட்டையில் உள்ள அரசு தென்னை பண்ணையில், தென்னை வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி முகாம், பண்ணை மேலாளர் ஸ்ரீவித்யா தலைமையில் நேற்று நடந்தது.அதில் ஏற்காடு தோட்டக்கலை வளர்ச்சி மைய டாக்டர்கள் மாலதி, செந்தில்குமார், தென்னை நாற்றாங்கால் உற்பத்தி, தாய் மரம் தேர்வு, நடவு முறை, மண், பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனர்.மேலும் தென்னை வாரியம் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், மதிப்புக்கூட்டல், தென்னை தொடர்பான தொழில் முனைவோர் வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தவிர பண்ணையில், நெட்டை ரக கன்று, 65 ரூபாய், நெட்டை குட்டை ரக கன்று, 125 ரூபாய்க்கு விற்கப்படுவதால், விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என, பண்ணை மேலாளர் எடுத்துரைத்தார். இதில், 85 விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி