சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில்களில் நடை அடைப்பு
சேலம்: நடப்பு ஆண்டு முழு சந்திரகிரகணம் இன்று மதியம், 3:15 மணிக்கு துவங்கி மாலை, 6:50 மணி வரை நீடிக்கிறது. இதனை-யொட்டி, சேலம் கோட்டை அழகிரி நாதர் கோவிலில் இன்று மதியம் 1:00 மணிக்கு மேல் நடை அடைக்கப்படும். சந்திரகிரகணம் முடிந்த பின் இரவு, 7:00 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, கோவில் முழுவதும் கழுவி சுத்தம் செய்து, பரி-கார பூஜை நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக மாலையில் தரிசனம் கிடையாது. நாளை (மார்ச் 4) காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இது குறித்து கோவிலில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.இதே போல், சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில், சுகவனேஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜர், அம்மாபேட்டை சவுந்தர-ராஜர், செவ்வாய்பேட்டை பாண்டு ரங்கநாதர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் மதியம் நடை அடைத்து கிரகணம் முடிந்த பின், சுத்தம் செய்து பரிகார பூஜை செய்யப்படவுள்-ளதால், இன்று மாலை பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.