உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தற்காலிக பட்டாசு கடை 21க்குள் விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு கடை 21க்குள் விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு கடை21க்குள் விண்ணப்பிக்கலாம்சேலம், அக். 5-சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: வரும், 31ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் மாநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட இடங்களை தவிர்த்து சட்டப்படி தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க இணைய தளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், வரும், 21 மாலை, 5:00 மணிக்குள், அருகே உள்ள இ - சேவை அல்லது பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அதன்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படாது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !