சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் கிழக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் தகவல்
சேலம் : ''முதல்வர் ஸ்டாலின், சொன்ன திட்டங்களை மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்,'' என, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை: தமிழகத்தில், 'திராவிட மாடல்' ஆட்சியில், கடந்த, 4 ஆண்டுகளில், முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை கொடுத்து, இந்தியாவின் முதன்மை முதல்வராக உள்ளார். முதல்வர் சொன்ன திட்டங்களை மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.குறிப்பாக விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், எல்லோருக்கும் எல்லாம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, பல்வேறு திட்டங்கள் மூலம் வீரர்களை ஊக்குவித்து விளையாட்டுத்துறையை உலக அளவில் எடுத்துச்சென்றுள்ளார்.தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர் வழியில், அமைச்சர், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் ஆலோசனைப்படி நடப்போம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.