வெயிலால் வெற்றிலை கருகலை தடுக்க ஈரப்பதத்தில் தோட்டம் இருக்க வேண்டும்
வாழப்பாடி: வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகு-திகளில், 100 ஏக்கருக்கு மேல் வெற்றிலை தோட்டங்கள் உள்-ளன. ஆனால் தற்போது கொளுத்தும் வெயிலால், வெற்றிலையில் கருகல் நோய் ஏற்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தினர்.இதுகுறித்து வாழப்பாடி தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் இளங்கோ கூறுகையில், ''சில நாட்களாக வெயில் தாக்கம் அதிக-ரித்துள்ளதால், வெற்றிலையில் கருகல் நோய் ஏற்படலாம். இல்லை எனில் பூச்சி தாக்குதலால் கருகல் ஏற்படலாம். கோடை காலத்தில் வெற்றிலை தோட்டத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். பூச்சி தாக்குதலால் கருகல் நோய் ஏற்பட்டால் மருந்து மூலம் குணப்படுத்தலாம்,'' என்றார்.