உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு அலுவலகம் மீது விழுந்த மரத்தை அகற்றாததால் அலுவலர்கள் அவதி

அரசு அலுவலகம் மீது விழுந்த மரத்தை அகற்றாததால் அலுவலர்கள் அவதி

ஆத்துார்:ஆத்துார் தாலுகா அலுவலக பின்புறம் உள்ள பழமையான கட்டடத்தில் ஆதிதிராவிடர் நல தாசில்தார், முத்திரை கட்டண தனி தாசில்தார், வன எல்லை நிர்ணய அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் உள்ளன. மழையின்போது, அந்த அலுவலகம் முன் மழைநீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இரு வாரங்களுக்கு முன் பெய்த மழையின்போது, அலுவலகம் முன் உள்ள கொடுக்காபுளி மரத்தின் பெரிய மரக்கிளை, ஆதிதிராவிடர் தாசில்தார் கட்டடம் மற்றும் பாதையில் விழுந்தது. அந்த கிளையை இதுவரை அகற்றாததால் அங்கு பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், மனு அளிக்க வரும் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால் மரக்கிளையை அகற்றுவதோடு, அலுவலகம் முன் மழை நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அலுவலர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ