கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை பச்சமலை வனப்பகுதி மக்கள் அச்சம்
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே பச்சமலை வனப்பகுதியில், இரு மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. கடந்த செப்டம்பரில், 3 கன்றுக்குட்டிகள், ஒரு பசு மாட்டை சிறுத்தை கொன்றது. இந்நிலையில் எடப்பாடி மலைக்கிராமத்தை சேர்ந்த காந்தி, 60, என்பவரது கன்றுக்குட்டியை, சிறுத்தை கொன்றுள்ளது.இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், 'சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்தும், கூண்டு வைத்து பிடிக்காமல் உள்ளனர். இதனால் பசு, கன்றுக் குட்டிகளை கொன்று வருகிறது. இரவில் நிம்மதியின்றி வாழ்கிறோம். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.வனத்துறையினர் கூறுகையில், 'நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தி ஆய்வு செய்து வருகிறோம். கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க அரசிடம் இருந்து அனுமதி பெறவில்லை' என்றனர்.