தீர்த்தக்குட ஊர்வலம்: இன்று கும்பாபிேஷகம்
இளம்பிள்ளை:இளம்பிள்ளை அருகே முருங்கப்பட்டி, பெத்தாம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், இன்று காலை, 9:00 முதல், 10:30 மணிக்குள் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை, 6:00 மணிக்கு கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி அங்குள்ள குளத்தில் இருந்து புனித தீர்த்தத்தை குடங்களில் நிரப்பி சந்தனம், குங்குமம் இட்டு, பூக்களால் அலங்கரித்தனர். பின் கோவில் சிவாச்சாரியார், தீர்த்தக்குடங்களுக்கு பூஜை செய்தார். கோ பூஜை, அஸ்வ பூஜை நடந்தது. பின் மேள, தாளம் முழங்க, குடங்களை தலையில் சுமந்தபடி,பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். முன்னதாக, பசு, ஒட்டகம், குதிரை அணிவகுத்தன. பால்குட ஊர்வலம்சேலம், பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த, 14ல் தொடங்கியது. நேற்று காலை பால்குட ஊர்வலம் நடந்தது. வாய்க்கால்பட்டறை விநாயகர் கோவிலில் இருந்து, மேள தாளம் முழங்க தொடங்கிய ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள், பால்குடங்களை தலையில் சுமந்து கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இரவு சக்தி கரக ஊர்வலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை பொங்கல் வைத்தல் நடக்கிறது. மாலையில் அக்னி கரகம், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம், புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது. நாளை இரவு சத்தாபரணம், மே, 3 மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.களி படையலிட்டு வழிபட்ட பக்தர்கள்இளம்பிள்ளை:இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர்கோவிலில் சித்தர் சிறப்பு திருவிழாவை ஒட்டி, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு சிறப்பு சந்தனகாப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை சுற்றுவட்டார கிராம மக்கள், குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். பின் ராகி, பனைவெல்லம், அவரை கொட்டை ஆகியவற்றை கலந்து களியை கிண்டி சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். பலர் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டனர். மதியம், நல்லணம்பட்டி திருமலைக்கவுண்டர் வகையறாவை சேர்ந்த ஒருவர், மொட்டை அடித்து உடம்பில் சந்தனம் பூசி, கோவிலை சுற்றி உருளுதண்டம் போட்டார். அப்போது மற்றொருவர், மாட்டு கயிறால் அவரை அடித்தார். இந்நிகழ்வு சித்தரை அந்த காலத்தில் மாட்டு கயிற்றால் அடித்ததை நினைவு கூறும்படியும், சித்தரிடம் அடித்ததற்கு மன்னிப்பு கோரும்படியும் காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வு என, பக்தர்கள் தெரிவித்தனர்.அணை முனியப்பன்சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மேட்டூர் அணை முனியப்பன் கோவிலில் நேற்று, சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. குறிப்பாக பஞ்சாமிர்தம், பன்னீர், தயிர், சந்தனம், 250 லிட்டருக்கு மேல் பால் அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமியை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தேரோட்டம்அதேபோல் தலைவாசல், கவர்பனை மகா மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை ஏராளமான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியே தேரை இழுத்துச்சென்றனர். அப்போது அம்மன், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு தேர் கோவிலை அடைந்தது.