உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்கள் மத்தியில் இ.பி.எஸ்., மீது நம்பிக்கை உள்ளது

மக்கள் மத்தியில் இ.பி.எஸ்., மீது நம்பிக்கை உள்ளது

ஆத்துார், ஆத்துார் சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., சார்பில், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், ஆத்துாரில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்தார். அதில் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: மக்கள் மத்தியில், இ.பி.எஸ்., மீது நம்பிக்கை வந்துள்ளது. 2026ல், இ.பி.எஸ்., முதல்வராக வெற்றி பெற்ற பின், தொடர்ந்து அவர் தான் முதல்வராக இருப்பார். தி.மு.க., என்ற கட்சியே இல்லாத நிலை உருவாகும். ஆளுங்கட்சியாக இருப்பதால், பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என்ற, தி.மு.க.,வின் முயற்சியை முறியடிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில், இ.பி.எஸ்., பிரசார பயணத்துக்கு வரும்போது, கட்சியினர், மக்களை அதிகளவில் பங்கேற்க செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். ஆத்துார் நகர செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை