மேலும் செய்திகள்
20 மாதங்களுக்கு முன் நகை திருட்டுக்கு வழக்கு
23-Aug-2025
சேலம்:சேலம், கிச்சிப்பாளையம், ஒத்தபிள்ளை காட்டை சேர்ந்தவர் பையாஸ், 20. இவரது யமகா பைக், கடந்த, 6 இரவு, வீடு முன் நிறுத்தியிருந்த நிலையில், மறுநாள் காலை காணவில்லை. அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்ததில், கிச்சிப்பாளையம் பச்சப்பட்டியை சேர்ந்த தவுகித், 19, திருடியது தெரிந்தது. நேற்று முன்தினம், அவரை கைது செய்த போலீசார், பைக்கை மீட்டனர்.புல்லட் திருட்டுதர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் நவீன், 20. சேலம் நெடுஞ்சாலை நகரில், வீடு வாடகைக்கு எடுத்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 17ல் அவரது, 'ராயல் என்பீல்டு' புல்லட்டை, வீடு முன் நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, புல்லட்டை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Aug-2025