/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சூப்பர் மார்க்கெட்டில் ரூ.1 லட்சம் திருட்டு ஹெல்மெட் அணிந்து ஆசாமி கைவரிசை
சூப்பர் மார்க்கெட்டில் ரூ.1 லட்சம் திருட்டு ஹெல்மெட் அணிந்து ஆசாமி கைவரிசை
ஆத்துார்: பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்தவர் செந்தில்-ராஜா, 40; சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே மஞ்சினி கிரா-மத்தில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். நேற்று காலை கடை திறக்க வந்தபோது, வெளிப்புற ஷட்டர் திறந்து, பூட்டு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, ஒரு லட்சம் ரூபாய், மளிகை பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது. கடையில் இருந்த 'சிசிடிவி' கேம-ராவை பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர், தலைக்கவசம் அணிந்த-படி வந்து சம்பவத்தில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. ஆத்துார் ஊரக போலீசார், ஆசாமியை தேடி வருகின்றனர்.