உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வருகை

மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வருகை

சேலம்,: சேலம் மாவட்ட பள்ளிகளில், ஒன்று முதல் 7ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான, 3ம் பருவ பாடப்புத்தகங்கள் சேலம் வந்தன.தமிழகத்தில் ஒன்று முதல், 7 ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், 5 ம் வகுப்பு வரை, எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்களில் கற்பித்தல் முறை நடந்து வருகிறது. தற்போது 2 ம் பருவ பாட வகுப்புகள் நடந்து வரும் நிலையில், 3ம் பருவ பாடப்புத்தகங்களை, மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியை, தமிழ்நாடு பாடநுால் கழகம் தொடங்கியது.இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 1,563 பள்ளிகளை சேர்ந்த, 1 லட்சத்து, 16 ஆயிரம் மாணவ, மாணவியருக்கான 3ம் பருவ பாடப்புத்தகங்கள் வர தொடங்கியுள்ளன. சேலம், கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பாடப்புத்தகங்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை