உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதை மாத்திரை, கஞ்சா சாக்லெட் விற்ற 3 பேருக்கு காப்பு

போதை மாத்திரை, கஞ்சா சாக்லெட் விற்ற 3 பேருக்கு காப்பு

சேலம் :சேலம், வீராணம் அடுத்த சந்தைப்பேட்டையை சேர்ந்த மணி மகன் அருணாசலம், 25. எலக்ட்ரீஷியனான இவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து, போதை மாத்திரை பயன்படுத்தினார். தொடர்ந்து, கஞ்சா சாக்லெட்டும் பயன்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனம் திருந்தினார். எனினும் அவருக்கு போதை மாத்திரை, கஞ்சா சாக்லெட் விற்று வந்தவர், தொடர்ந்து வாங்கும்படி நெருக்கடி கொடுத்தார். பாதிக்கப்பட்ட அருணாசலம், வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம், மேற்கு தேரடி வீதியை சேர்ந்த கபிலேஷ், 26, என்பவரை கைது செய்த போலீசார், அவரது வாக்குமூலப்படி, கூட்டாளி களான, அதே பகுதியை சேர்ந்த பிளஸ் சன், 20, மங்களம், மேட்டாங்காடு தினேஷ், 22, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை