சுற்றுலா பயணியர் ஏற்காட்டில் குதுாகலம்
ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இரு மாதங்களாக, பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நடந்து வந்தது. தற்போது தேர்வு முடிந்து கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. அத்துடன் ஞாயிறான நேற்று, ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வந்தனர். இதனால் அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை, சுற்றுலா பயணியர் பார்த்து ரசித்தனர். முக்கியமாக படகு இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயண சீட்டு வாங்கி வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.