உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாமாங்கம் - கொண்டலாம்பட்டி வரை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மாமாங்கம் - கொண்டலாம்பட்டி வரை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சேலம்: தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு, நேற்றுடன் முடிந்தது. இதனால் சொந்த ஊர்களில் இருந்து பணி இடங்களுக்கு நேற்று காலை முதலே பலரும் செல்லத்தொடங்கினர். இதனால் சேலம் புது பஸ் ஸ்டாண்ட், ஜங்ஷனில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, பயணிகள் நீண்ட நேரம் பஸ்சுக்கு காத்திருந்து சென்றனர். கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டபோதும், பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாமாங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதனால் வெளியூரில் இருந்து சேலம் மாநகருக்குள் நுழையும் வாகனம், சேலம் வழியே வெளியூர் செல்லும் வாகனம் ஆகியவை, ஒரே நேரத்தில் மாநகருக்குள் நுழைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக மாமாங்கம் முதல் கொண்டலாம்பட்டி வரை போக்குவரத்து நெரிசல் உருவாகி, 4 மணி நேரம் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், மேம்பால பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ