உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறிவுசார் மைய விவகாரம் ஆய்வுக்கு பின் 2 பேர் மோதல்

அறிவுசார் மைய விவகாரம் ஆய்வுக்கு பின் 2 பேர் மோதல்

வாழப்பாடி, வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் அமைக்க, சில மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்டது. இதனால் விளையாட்டு மைதானம் பாதிக்கப்படுவதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பள்ளியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பின்புறம் உள்பட, 3 பகுதிகளில் அறிவுசார் மையம் அமைப்பதற்கான இடத்தை, நேற்று காலை, சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார் ஆய்வு செய்தார். ஆனால் அவர் புறப்பட்டு சென்றதும், 2 பேர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'அறிவுசார் மையம் அமைக்க பணி தொடங்கப்பட்ட நிலையில், ஆதரவாக ஒரு தரப்பும், எதிர்ப்பாக மற்றொரு தரப்பும் செயல்படுகின்றனர். இதுதொடர்பாக, ஒரு பெண், தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதுகுறித்து மற்றொருவர் கேட்டபோது, அவருக்கும், அப்பெண்ணின் கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ