உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் முதலாம் வகை சர்க்கரை நோய் மையம் துவக்கம்

சேலம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் முதலாம் வகை சர்க்கரை நோய் மையம் துவக்கம்

சேலம், சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரி சர்க்கரை நோய் துறை மற்றும் கோவை இதயங்கள் அறக்கட்டளை இணைந்து, முதலாம் வகை சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை மையத்தின் துவக்க விழா, சேலம் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் தேவிமீனாள் தலைமை வகித்தார், தேசிய சுகாதார இயக்க தலைவர் அருண் தம்புராஜ், சிறப்பு சிகிச்சை மையத்தை துவக்கி வைத்து பேசியதாவது:சென்னையில் முதன் முதலாக துவங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக சேலத்தில் துவங்கப்பட்டுள்ளது. சில மாதங்களில் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 5 இடங்களில் இது போன்ற முதலாம் வகை சர்க்கரை நோய் சிகிச்சை மையம் துவங்கப்பட உள்ளது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்களை நோயாளியாக கருதி முடங்கி விடாமல், சராசரியான மனிதர்களை போன்று செயல்பட்டு, மன உறுதியோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து, ஆரம்ப நிலையிலேயே பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு பேசினார்.நிகழ்ச்சியில் கோவை இதயங்கள் அறக்கட்டளை தலைவர் சுப்ரமணியன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், சர்க்கரை நோய் துறை தலைவர் பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி