உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செங்கோட்டையன் விவகாரம் உதயகுமார் விளக்கம்

செங்கோட்டையன் விவகாரம் உதயகுமார் விளக்கம்

சேலம்: சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சை, எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட கட்சி-யினர் நேற்று சந்தித்தனர்.இதையடுத்து உதயகுமாரிடம், 'முன்னாள் அமைச்சர் செங்கோட்-டையன் பெயர், அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லையே?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் கூறியதாவது:நீங்கள் முதலில் சப்ஜெக்ட் தெரியாமல் கேள்வி, செய்தி போட்டால் எப்படி பதில் சொல்ல முடியும். மாவட்ட செயலராக உள்ளவர்கள், அந்த மாவட்டத்தை கவனிக்க வேண்டும் என்பதற்-காக, தேர்தல் பொறுப்பு போடப்படவில்லை. இதனால்தான் எந்த மாவட்ட செயலர் பெயரும், தேர்தல் பொறுப்பாளர் பட்டி-யலில் இடம்பெறவில்லை. சப்ஜெக்ட் தெரியவில்லை எனில், கேள்வி கேட்காமல் விட்டுவிடுங்கள். உங்கள் பரபரப்புக்கு, எங்-களை இப்படி செய்தால் என்ன செய்வது?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ