மேலும் செய்திகள்
ஏரியில் 'பசுமை வனம்' பணி தொடக்கம்
07-Sep-2025
பனமரத்துப்பட்டி, :சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேலும், ஏரிக்கு மழை நீர் வரும் பாதையில், 2,000 ஏக்கர் நீர் பிடிப்பு பகுதிகள் உள்ளன. இது குறித்து, சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க., தலைவர் குமார், (அன்புமணி அணி) கூறுகையில்,'' சேலத்தின் முக்கிய நீர் ஆதாரமான, பனமரத்துப்பட்டி ஏரியின் எல்லை பரந்து விரிந்து காணப்படுகிறது. ஏரியை சுற்றியும் அதன் எல்லை பகுதியில் ஒரு லட்சம் பனை விதை, பனை மரம் நடவு செய்து, இயற்கை வேலி அமைக்க வேண்டும். இதனால், நீர் ஆதாரம் பெருகி ஏரிக்கு பாதுகாப்பு வேலி அமைவதால், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்,'' என்றார். சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன் கூறுகையில்,'' பனமரத்துப்பட்டி ஏரியில், ஒரு லட்சம் பனை விதை நடவு செய்வது சம்பந்தமாக ஆலோசனை நடத்தவுள்ளோம்,'' என்றார்.
07-Sep-2025