உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதுவிலக்கு வழக்கில் சிக்கிய வாகனங்கள் 26, 27ல் பொது ஏலம்

மதுவிலக்கு வழக்கில் சிக்கிய வாகனங்கள் 26, 27ல் பொது ஏலம்

ஓமலுார், டிச. 21-மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும், 26, 27ல் பொது ஏலம் விடப்பட உள்ளது.இதுகுறித்து சேலம் மாவட்ட போலீஸ் துறை அறிக்கை:சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 4 சக்கர வாகனம் - 11, இருசக்கர வாகனங்கள் - 135 என, 146 வாகனங்கள், சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், வரும், 26, 27ல் பொது ஏலம் விடப்படும். 23 காலை, 10:00 மணி முதல், வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படும். ஏலம் எடுக்க விரும்புவோர், 4 சக்கர வாகனங்களுக்கு, 10,000 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு, 5,000 ரூபாய் முன்பணமாக, வரும், 24 காலை, 10:00 முதல், 25 மாலை, 5:00 மணிக்குள், ஆயுதப்படை மைதானத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டும் ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் எடுத்ததும், ஜி.எஸ்.டி.,யுடன் முழுத்தொகை செலுத்த வேண்டும். விபரங்களுக்கு 94981 06539 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ