உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விஜயராகவாச்சாரியார் பிறந்தநாள் பிராமணர் சங்கம் கொண்டாட்டம்

விஜயராகவாச்சாரியார் பிறந்தநாள் பிராமணர் சங்கம் கொண்டாட்டம்

சேலம், ஆசிரியர், அரசியல்வாதி உள்ளிட்ட பன்முக திறமை கொண்ட, சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு பிராமணர் சங்கம், அஸ்தம்பட்டி எக்ஸ்டென்ஷன் கிளை சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. சேலம், செரி ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில், கிளை பொருளாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்க முன்னாள் தலைவர் ஸ்ரீராமன், விஜயராகவாச்சாரியார் பெருமைகள், சாதனைகள் குறித்து பேசினார். தொடர்ந்து சேலம், 2ம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பின்புறம் உள்ள விஜயராகவச்சாரியார் சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, அச்சிலைக்கு மாலை அணிவிக்க படிக்கட்டுகள் இல்லாமலும், பராமரிப்பின்றியும் கிடப்பது குறித்து, கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் அழகாபுரம், ஜாகீர் அம்மாபாளையம், மரவனேரி, 2ம் அக்ரஹாரம், வாய்க்கால்பட்டறை, வித்யா நகர் ஆகிய கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை